இலங்கையில் தொழில் செய்யும் ஆகக்குறைந்த வயதை அதிகரிக்க பாராளுமன்றில் தீர்மானம்!

இலங்கையில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் இலங்கை சிறார்களின் பாதுகாப்பு, கல்வி மற்றும் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும் தொழில் செய்யும் ஆகக்குறைந்த வயதை 14இல் இருந்து 16ஆக அதிகரிக்க நேற்று(21) பாராளுமன்றில் தீர்மானிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை 2021 ஆம் ஆண்டை குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்த நிலையில்,

இந்தத் திருத்தத்தை இந்த ஆண்டின் முதல் பணியாக அங்கீகரிப்பது குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதில் இலங்கை அரசாங்கத்தின் முன்னோடி உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர்களை நாட்டில் முற்றாக இல்லாது செய்ய இலங்கை உறுதிபூண்டுள்ளது

Be the first to comment

Leave a Reply