நாட்டில் சில இடங்களில் மழை பெய்யலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்கு, ஊவா , பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய  மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யலாம் என வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத் தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதி கமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க் கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக் கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்பு களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Be the first to comment

Leave a Reply