
பொகவந்தலாவ சுகாதார அலுவலர் பிரிவின் கீழுள்ள இரு பிரதான பாடசாலைகளைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் 10 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதன்படி பொகவந்தலாவ ஹோலி றோசரி தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் கிர்க்ஸ்வெல் தோட்டத்தின் மத்திய பகுதியிலுள்ள பாடசாலையில் கற்று வரும் மூவருமே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக மற்றைய மாணவர்களை குறித்த பாடசாலைகளுக்குச் செல்ல அவர்களது பெற்றோர் இன்று அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment