இலங்கை அணியின் பிரபல நட்சத்திரம் ஓய்வு

சர்வதேச அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இலங்கை அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் #உபுல்_தரங்க

இலங்கை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி வந்து கொண்டே உள்ளது.

கடந்த காலமாக இவரின் சிறப்பான பெறுபேறுகள் உள்ளூர் போட்டிகளில் இருந்தும் தேசிய ஆணைக்குழு உள்வாங்கப்படவில்லை.

இவ்வாறு தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தன்னுடைய சர்வதேச அனைத்து வகை போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

இதுவரை இவர் 31 டெஸ்ட் போட்டியில் விளையாடி 1754 ஓட்டங்கள் பெற்றுள்ளார். அவற்றில் 8 அரைச்சதம், 3 சதங்களாக 31.89 சராசரியை கொண்டுள்ளார்.

இவர் 235 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6951 ஓட்டங்கள் பெற்றதோடு, அவற்றில் 15 சதங்கள், 37 அரைச்சதங்களும் பெற்று 33.74 சராசரியை கொண்டுள்ளார்.

சர்வதேச டி20 போட்டியில் 26 போட்டிகள் 407 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.

இத்தனை திறமைகள் இருந்தும் அணியில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஓய்வை அறிவித்தார்.

Be the first to comment

Leave a Reply