ஒரு லட்சம் மரக்கன்றுகளை நாட்டும் தேசிய சாரணர் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

ஒரு லட்சம் மரக்கன்றுகளை நாட்டும் தேசிய சாரணர் நிகழ்ச்சித்திட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி கோத் தாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமானது.

உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன்-பவல் பிரபுவின் 164 ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

தலைமை சாரணர் ஆணையாளர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஜனாதிபதி வரவேற்றார்.

ஜனாதிபதியினால் சந்தன மரக்கன்றொன்று நடப்பட்ட பின்னர் கையடக்க தொலைபேசி மூலம் அது பதிவு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் படி நாடளாவிய ரீதியில் உள்ள 70,000 க்கும் மேற்பட்ட சாரணர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு அவற் றைக் கவனித்துக்கொள்வார்கள்.

“துரு“ கையடக்க தொலைபேசி செயலியின் மூலம் இந் நிகழ்ச்சித்திட்டம் மதிப்பீடு செய்யப்படும்.

இந்நிகழ்ச்சியில் இலங்கை சாரணர் இயக்க அதிகாரி களும் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply