வறட்சியால் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என எச்சரிக்கை

எதிர்வரும் மாதங்களில் வறட்சி காரணமாக மேல் மாகாணத்தில் நீர் வழங்கல் தடைப்படும் அல்லது குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

களுகங்கை, களனி கங்கை ஆகியவற்றில் நீரில் ஏற்படும் உவர் தன்மை காரணமாக மேல் மாகாணத்திலுள்ள மக்கள் நீரை குறைவாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உதவி பொது முகாமையாளர் பிரியால் பத்மநாத பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

நதி நீரில் உப்பு நீர் கலப்பதை தடுக்க மணல் பைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் வறட்சி காரணமாக நதி நீர் குறையத் தொடங்கியுள்ளதாகவும் இதன் விளைவாக அந்நீர்நிலைகளில் உவர் நீர் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply