யாழ்.கலாசார நிலையத்தை அரசுக்கு வழங்க முன்னாள் முதல்வர் உடன்பட்டார்: யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணன்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைக்
கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கைய
ளிக்க யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்
இணங்கியிருந்ததாக தற்போதைய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்
துள்ளார்.

இதன் காரணமாகவே, குறித்த கட்டிட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்தும்
அதனைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஊடகச் சந்திப்பின்போது அவர்
குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தைக் கையேற்பதற்கான முயற்சிக
ளில் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக கலாசார நிலையத்தை இயக்குவதற்கான
உத்தியோகத்தர்களை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொள்வதற்கான முயற்
சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.

நான் மாநகர முதல்வராகப் பதவியேற்ற காலத்திலிருந்து முதல் பணியாக
இந்த விடயத்தை முன்னிறுத்தி செயற்படுத்தி வருகிறேன். எனினும், குறித்த
கட்டடம் யாழ்ப்பாண மாநகர சபையிடமிருந்து பறிக்கப்படும் நிலை காணப்படு
கின்ற நிலையில் அதனை, யாழ். மாநகர சபை பொறுப்பேற்று நடத்துவதற்குரிய
செயற்பாட்டை நான் முன்னெடுத்துள்ளேன்.

அத்தோடு, அங்கே பணியாற்றுவதற்காக 67 உத்தியோகத்தர்களுக்கான
நியமனங்களை வழங்குவதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுத்துள்ளேன்.
மேலும், அந்தக் கட்டடத்தை நிர்மாணித்த பொறியியலாளர்களிடம் கட்டி
டத்தை எவ்வாறு கையாள்வது, பராமரிப்பது என்பது தொடர்பான பயிற்சிகளை
வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். வெகு விரைவில் உத்தி
யோகபூர்வமாக குறித்த கட்டடமானது திறப்பு விழா செய்யப்பட்டு யாழ். மாநகர
சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.

அத்தோடு, இந்தியத் துணைத் தூதுவரிடம் இது குறித்து பல விடயங்களைத்
தெரியப்படுத்தி உள்ளோம். அவர்களும் இதற்கு ஒத்தாசை வழங்கி வருகின்றார்
கள்.

இதேவேளை, முன்னைய மாநகர ஆட்சியாளர் குறித்த கலாசார மத்திய
நிலையத்தை மத்திய அரசாங்கத்துக்குக் கையளிப்பதற்கு இணங்கியிருந்த
தன் காரணமாகவே இவ்வளவு காலமும் குறித்த கட்டடம் திறக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த கலாசார மத்திய நிலையம் யாழ். மாநகர சபையின் சொத்தாகும்.
அது இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு நமது மாநில சபைக்கு மீண்
டும் கையளிக்கப்படவுள்ளது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply