இன அழிப்புக்கு நீதிகோரும் குரலை புலம்பெயர் தமிழர்கள் வலுப்படுத்தவேண்டும்!

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் அந்தந்த நாடுகளன்தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு தமிழின அழிப்பிற்கு எதிரான குரலை வலுவாக்க வேண்டும். என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலங்கம் கூறியுள்ளார்.

தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளின் கூட்டம் இன்றைய தினம் யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இங்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதப்போது மேலும் அவர் கூறுகையில்,

இறுதிப் போரில் இடம்பெற்ற இனப் படுகொலைகளுக்கு நீதி வேண்டி போராடி வரும் தமிழ் சமூகம் ஐ.நா சபை தமக்கு நீதியைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கை தொடர்பில் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள்

தமது நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக தங்கள் நாட்டு கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு போராட்டத்தில் இறங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply