கொரோனா தடுப்பூசி- மிக முக்கிய பிரமுகர்களுக்கு முன்னுரிமை வழங்கியதா கொழும்பு மாநகரசபை?

கொழும்பு மாநகரசபை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும்போது மிக முக்கிய பிரமுகர்களிற்கு முன்னுரிமை வழங்கியது என வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளை மேயர் ரோசி சேனநாயக்க நிராகரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டவேளை மிக முக்கிய பிரமுகர்களிறகு முன்னுரிமை வழங்கப்பட்டதாக கொழும்பு மாநகரசபையின் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

எனினும் ரோசிசேனநாயக்க இதனை நிராகரி;த்துள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர்கள் பணியாளர்கள் டவுன் ஹோலிற்கு அருகில் இருப்பவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
டவுன்ஹோலிற்கு அருகில் இருப்பவர்கள் என்பது வோர்ட்பிளேஸ் ரோஸ்மீட் பிளேஸ் டொரிங்டன் சதுக்கத்தில் வசிப்பவர்களை குறிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்களே இந்த பட்டியலை தயாரித்தனர் அதன் போது சில முக்கிய பிரமுகர்களும் தடுப்புமருந்தினை பெற்றனர் என குறிப்பிட்டுள்ள ரோசி சேனநாயக்க ஆனால் அவர்கள் ஏனையவர்களை போலவே பதிவு செய்யப்பட்டிருந்தனர் விசேட பிரமுகர்களிற்கான முன்னுரிமைகள் எவையும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பிரஜையும் எனக்கு விஐபியே என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply