சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள 16 புதிய தடுப்பூசிகளை மனிதா்களிடம் சோதிக்க அனுமதி!

சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள 16 கரோனா தடுப்பூசிகளை மனிதா்களுக்குச் செலுத்தி சோதிக்க அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது:

புதிதாக 16 கரோனா தடுப்பூசிகளை தன்னாா்வலா்களுக்குச் செலுத்தி சோதிப்பதற்கு சீன மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அவற்றில் ஆறு தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனை நிலையில் உள்ளன என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, சைனோஃபாா்ம், சைனோவேக் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் இரு கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு சீனா அனுமதி அளித்துள்ளது நினைவுகூரத்தக்ககது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி, சீனாவில் 1,00,727 போ் கரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 4,833 போ் அந்த நோய்க்கு பலியாகினா்.

Be the first to comment

Leave a Reply