தாராலிங்க எட்டுப்பட்டை சிவலிங்க வரலாறு

முதற்கண் காணப்படுவது சென்னை வழியாக கும்பகோணம் மாயாவரம் செல்லும் பாதையில் பூந்தோட்டம் எனுமிடத்தில் அமைந்ததுள்ள கூந்தலூர் எனுமிடத்தின் முருகன் ஆலயத்தின் தாரா லிங்கம் எண்முக லிங்கம் அடுத்து ஈழத்தின் முல்லைத்தீவு குருந்தூர்மலை புராதன சிவன் ஆலயத்தின் தாரா லிங்கம் அல்லது பாணப்பட்டை சிவலிங்கம் எனப்படும் சிவலிங்கங்களில் பலவகை லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சம் உண்டு. அவற்றில் ஒன்றே தாரா லிங்கம் என்பதாகும். பல்லவர் காலத்தை சார்ந்த அபூர்வமான தாரா லிங்கம் என்பது பாணப் பகுதியில் பட்டைகளோடு காட்சி தரும் லிங்கங்கள் ஆகும். அப்படிப்பட்ட லிங்கங்கள் அனைத்து ஆலயங்களிலும் இருக்காது. தாரா லிங்கங்களில் எட்டு பட்டை, பதினாறு பட்டை மற்றும் பன்னிரண்டு பட்டைகளைக் கொண்ட சிங்கங்கள் காணப்படுகின்றன அவற்றுள் தாரா லிங்கத்தை வணங்கி வந்தால் பல செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை ஆகும்.

Be the first to comment

Leave a Reply