க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் மேல் மாகாணத்தில் பாடசாலைகள் இன்று ஆரம்பம் – பேராசிரியர் கபில பெரேரா

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் மேல் மாகா ணத்தில் இன்றையதினம் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் மேல் மாகாணத்தில் பாடசாலைகள் இன் றையதினம் தினம் திறக்கப்படவுள்ளது.

இன்று முதல் 907 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்பெறும் க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு மேல் மாகா ணத்தில் 79 ஆயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply