மனித உரிமை பேரவையை திருப்திப்படுத்துவதற்காக அரசியல் கைதிகள் விவகாரத்தை பயன்படுத்த திட்டம்?

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்ப்பை குறைப்பதற்காக அரசியல் கைதிகள் விவகாரத்தை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து அரசாங்கம் உடனடியாக ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்குமாறு சட்டமாஅதிபர் திணைக்களம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஏனைய பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என வெளிவிவகார அமைச்சர் வாரஇதழ் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார் எனினும் மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை.

Be the first to comment

Leave a Reply