
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஊரங்கு உத்தரவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிலிருந்து விடுவிக்கப்படுவதுடன், புதிதாக பல பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்படுகின்றன.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த தீர்மானங்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தனிமைப்படுத்தப்படும் பகுதிகளாக…
01. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அம்பலாந்தொட்ட, பிரதேச செயலகத்தைச் சேர்ந்த போலனா தெற்கு கிராம சேவகர் பிரிவு எண் 140 இல் உள்ள மக்கோனியா கிராமம்.
02. பூஜாபிட்டி சுகாதார மருத்துவ அலுவலர் பிரிவில் பல்லியகொடுவ மற்றும் கல்ஹின்ன கிராம சேவகர் பிரிவுகள்.
அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊடங்கு உத்தரவு நீக்கப்படும் பகுதிகளாக…
01. கல்முனை வடக்கு கிராம சேவகர் பிரிவு
கல்முனை 1 C
கல்முனை 1 E
கல்முனை 2
கல்முனை 2 A
கல்முனை 2 B
கல்முனை 3 A
02. கல்முனை தெற்கு கிராம சேவகர் பிரிவு
கல்முனை 01 (M.D)
கல்முனை குடி 01
கல்முனை குடி 02
கல்முனை 03 (M.D)
Be the first to comment