இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்ஷன்!

இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்ஷன்!

2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்ஷன் ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளார்.

ரான்ஸ்பரன்ஸி இன்ரநஷனல் சிறிலங்கா (Transparency International Sri Lanka) நிறுவனத்தால் ஊழலற்ற நிர்வாகத்துக்கான குறுஞ்செய்தி அனுப்பும் வாக்கெடுப்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்ஷன் பொதுமக்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்த தேர்தல் நேற்றுமுன்தினம் 22ஆம் திகதி முடிவடைந்த நிலையில் அவருக்கு பெருமளவில் வாக்குகள் குவிந்தன.

இதனையடுத்து இலங்கையின் ஊழலற்ற அதிகாரியாக தெரிவுசெய்யப்பட்டு இன்றைய தினம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்ஷனுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விருதினை முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வழங்கிவைத்தார்

Be the first to comment

Leave a Reply