YOUTUBE தொலைக்காட்சி ஆரம்பித்து விட்டு பிரபல வானொலியிலிருந்து விலகிய அறிவிப்பாளர்கள்

YOUTUBE தொலைக்காட்சி ஆரம்பித்து விட்டு பிரபல வானொலியிலிருந்து விலகிய அறிவிப்பாளர்கள்

இலங்கை தமிழ் ஊடகங்களில் கடந்த ஓரிரு தினங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக பிரபல அறிவிப்பாளர்கள் தமது பதவிகளிலிருந்து விலகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையின் பிரபல வானொலியான சூரியன் எப்.எம்மில் கடமையாற்றிய சந்துரு மற்றும் மேனகா ஆகியோர், திடிரென தமது பதவி விலகலை அறிவித்திருந்தனர்.

இந்த இருவரும் தமது பேஸ்புக் ஊடாக ரசிகர்களுக்கு தமது விலகல் தொடர்பிலான அறிவிப்பை விடுத்திருந்தமை, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டே, தாம் பதவி விலகியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் தனியாக YOUTUBE தொலைக்காட்சி ஆரம்பித்து காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.

மொத்தத்தில் இவர்கள் ரசிகர்களை சமூக வலைத்தளங்களுடாக சந்திக்க இருக்கின்றனர்.

இதனால்தான் தற்போது இவர்கள் குறித்த வானொலியிலிருந்து விலகியிருப்பார்கள் என பேசப்படுகிறது

Be the first to comment

Leave a Reply