
நாடு எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய அபாயம்: அகில இலங்கை தாதியர்கள் சங்கம் எச்சரிக்கை!
நாட்டின் வைத்தியசாலைக் கட்டமைப்பு வீழ்ச்சியடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக, அகில இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பல்வேறு வைத்தியசாலைகளின் சிகிச்சை பிரிவுகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தாதியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமையே இவ்வாறான நிலைமைக்கு காரணம் என அகில இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இவ்வாறான குறைபாடுகள் தொடர்டபில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது
Be the first to comment