நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள் சபை உடைமையாக்கப்படும்!

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள் சபை உடைமையாக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

காணி உரிமையாளர்களினால் அவை பராமரிக்க தவறினால் குறித்த காணி சபை உடைமையாக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்தார்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் உள்ள காணிகள் உரிமையாளர்களால் பராமரிக்கப்படாது புற்கள் வளர்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றது.

இந்நிலையில் குறித்த காணிகளை பிரதேச சபை உறுப்பினர்களுடன் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது குடாநாட்டில் டெங்கு நுளம்பு பரவும் அபாயநிலை காணப்படுகின்றது.

அத்தோடு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியினை தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதற்கு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள காணி உரிமையாளர்கள் தமது காணிகளை உடனடியாக துப்பரவு செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் பராமரிப்பற்ற காணிகள் அனைத்தும் நல்லூர் பிரதேச சபையின் உடைமையாக்கபடும் எனவும் அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply