22 இலங்கைத் தொழிலாளர்களைக் கொண்ட முதல் குழுவினர் தென்கொரியா பயணம்

22 இலங்கையர்களைக் கொண்ட முதல் குழுவினர் வேலைவாய்ப்புக்காக தென்கொரியாவுக்கு நேற்றுக் காலை சிறப்பு விமானமொன்றில் புறப்பட்டனர்.

குறித்த இலங்கைத் தொழிலாளர்கள் 48 மணி நேரத்துக்கு முன் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் தென்கொரியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

கொவிட்-19 பரவலைத் தடுக்க கொரியக் குடியரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின்படி 2021 ஜனவரி 01 முதல் கொரியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் செல்லுபடியாகும் பிசிஆர் சோதனை அறிக்கையை சமர்ப்பித்தல் கட்டாயமாகும். குறித்த பிசிஆர் அறிக்கையானது கொரியாவினுள் நுழைவதற்கு முன் 72 மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

இதேவேளை பிசிஆர் சோதனை அறிக்கை இல்லாத தொழிலாளர்கள் கொரிய அரசினால் நாடு கடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply