சட்ட அமைப்பில் மாற்றம் தேவையான 100 இடங்களை கண்டுபிடித்த நீதி அமைச்சர்!

இலங்கையில் சட்ட அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய சுமார் 100 பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அவற்றில் 37 பகுதிகளை மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிற பகுதிகளில் மாற்றங்களை பரிந்துரைப்பதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தள்ளார்.

அத்துடன் கடந்த வாரம் நீதி அமைச்சர் அமைச்சரவையில் பல தகவல்களை சமர்ப்பித்திருந்தார்.

மத மற்றும் குடிவரவு சட்டத்தின் திருத்தங்கள், சிறார்களுக்கு மரண தண்டனை தொடர்பான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 53, ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியச் சட்டம், பணமோசடி சட்டம், பண மோசடி தடுப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதி மாநாடு ஆகியவை அதில் அடங்கியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply