வாடகை விமானத்தில் வந்திறங்கினார் பைடன்! ட்ரம்ப் அவமதிப்பு

அடுத்த அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோ பைடனை வெளிப்படையாக டொனால்ட் ட்ரம்ப் அவமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பதவியேற்புக்காக ஜோ பைடன் வோஷிங்டன் டி.சிக்கு வரவேண்டும். ஆனால், அவருக்கு தற்போதைய அதிபர் ட்ரம்ப் அரச விமானத்தை ஒதுக்கவில்லை.

இதனால், வேறு வழியில்லாமல், வாடகைக்கு தனியாக ஒரு விமானத்தை அமர்த்திக்கொண்டு பயணம் செய்துள்ளார் ஜோ பைடன்.

அத்துடன், ஜோ பைடன் வோஷிங்டனில் கால் பதித்த நேரம், வெள்ளை மாளிகை ட்ரம்பின் பிரிவு உபசார காணொளியை வெளியிட்டது.

அதில், மரியாதைக்குக்கூட ஜோ பைடனின் பெயரை உச்சரிக்கவோ, அடுத்த அதிபராக பதவியேற்பதற்காக அவருக்கு வாழ்த்துச் சொல்லவோ இல்லை அதிபர் ட்ரம்ப்.

இதேவேளை ஜோ பைடனுக்கு வாழ்த்துச் சொல்லாமலே வோஷிங்டனை விட்டு வெளியேறவும் ட்ரம்பின் குடும்பம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply