கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவாலய தாக்குதல்தாரியின் தந்தை கைது

கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் மூலம்  கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தாக்கிய சந்தேக நபரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேற்படி தற்கொலைதாரியின் தந்தையைக் கைது செய்து அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் 2 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் குறித்த நபரை ஆஜர்படுத்த சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply