ஆபத்தான சூழ்நிலையில் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது பொருத்தமானதா?

பிரத்தியேக வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கியுள்ள இந்நிலையில் வகுப்பறையில் குறைந்த பட்ச மாணவர்களின் எண்ணிக்கை குறித்து விழிப் புணர் வுடன் செயற்படுமாறு அனைவரிடமும் அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரித்துள்ளார்.

பிரத்தியேக வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க அனுமதிக்கப்படும் என்றாலும், சுகாதார வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப் படாவிட்டால் பிரத்தியேக வகுப்புகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப் படுவார்கள் என அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரித்துள்ளார்.

அத்துடன், பிரத்தியேக வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்குவதில் குறைந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply