கொவிட்-19 பாணி தயாரிப்பாளர் தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக விசாரணை

கொவிட்-19 பாணி தயாரிப்பாளர் தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் விசாரணையை ஆரம்பித்துள்ளார்.

குறித்த பாணி மருந்தை வாங்க வந்த நால்வரை பண்டார தாக்கியதாகக் கூறி பேராதெனிய பொலிஸில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு வரகாபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்படி தாக்குதல் நிகழ்ந்த கடந்த 12ஆம் திகதியன்று பண்டாரவின் இல்லத்துக்கு இரு மருத்துவர்கள் உட்பட நால்வர் சென்றிருந்தனர்.

கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் விசாரணையை அடுத்து பண்டார கைது செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply