திடீரென இருளில் மூழ்கிய யாழ்.கந்தசுவாமி ஆலய வரவேற்பு வளைவு!

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு கடந்த 14 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய வரவேற்பு வளைவு சிறப்பாக திறந்து வைத்தார்கள்.

ஆனால் இன்றுவரை இந்த வளைவு பகுதியில் மின்விளக்கள் இன்றி இருள்சூழ்ந்த நிலையில் உள்ளது. அங்கு குறைந்தது ஐந்து மின்விளக்குகள் வாங்கி பொருத்த நல்லூர் பிரதேச சபையால் முடியாதா? இதற்கும் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள்தான் நிதி ஒதுக்கி தரவேண்டுமா?

கோயில் கோபுரங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது போல இந்த வரவேற்பு வளைவு அழகாக தெரியும்படி மேற்பகுதியில் கூட மின்விளக்கினை பொருத்தமுடியும். நல்லூர் ஆலயத்தை சுற்றி பல மின்விளக்குகள் இருக்கு ஆனால் ஆலயத்தின் பெயரை வைத்து கட்டிய வரவேற்புவளைவு இருளில் இருக்கிறது.

Be the first to comment

Leave a Reply