கொரோனா நோயாளியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ! வெளிவந்த புகைப்படங்கள்

அண்மையில் ஹொரனையில் திறக்கப்பட்ட டயர் தொழிற்சாலையின் உரிமையாளரான பிரபல தொழிலதிபர் நந்தன ஜெயதேவ லொகுவிதானவை சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரிக்கி விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் குறித்த தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவுக்கு நேற்று கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்தே அவருடன் தொடர்பிலிருந்த காரணத்திற்காக தொழிலதிபரை தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஜனவரி 15 ஆம் திகதி நடைபெற்ற திறப்பு விழாவின் போது இராஜாங்க அமைச்சரும் தொழிலதிபரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை குறித்த நிகழ்வுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன் குறித்த தொழிலதிபருடனும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சருடனும் ஜனாதிபதி நெருங்கிய தொடர்பை பேணியதாக சிங்கள ஊடகத்தை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply