மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பகுதிகளில் இன்று முதல்அன்டிஜென் பரிசோதனை – அஜித் ரோஹண

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களை எழுமாற்றாக விரைவான அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத் தும் நடவடிக்கையை இன்று முதல் முன்னெடுக் கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங் களில் இச்சோதனை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் தொடர்பாக அரசாங்கத்தால் வெளி யிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை அரச மற்றும் தனியார் நிறு வனங்கள் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் சுற்றிவளைப்பை  மேற்கொண்டு வருவதாகவும் அஜித் ரோகண தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply