துப்பாக்கிச் சூட்டில் முடிந்த கணவன் – மனைவி சண்டை! இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Sri Lankan police officers gather following a shootout on the outskirts of Colombo, Sri Lanka, Saturday, Oct. 8, 2011. A police official said former lawmaker Bharatha Lakshman Premachandra and two of his supporters were killed Saturday in an intraparty shootout during local council elections. (AP Photo/ Eranga Jayawardena)

வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் இடியன் துப்பாக்கியினால் சுடப்பட்டு காயமடைந்திருந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது தேவராசா ஜெயசுதன் (29 வயது) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது அங்கு வந்த மனைவியின் உறவினர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவர் படுகாயமடைந்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பிரதேச வாசிகளால் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதுடன், துப்பாக்கியையும் மீட்டிருந்தனர்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த 29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவர் வவுனியா வைத்தியாசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

எனினும் ஒரு வாரம் கழித்து இன்றையதினம் அவர் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply