தனிமைப்படுத்தலிற்கு பயன்படுத்தப்படும் ஹோட்டல் உரிமையாளர்களிடம் மிரட்டி பணம் பறிக்க முயற்சி- இராணுவதளபதி

வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்களிடம் அச்சுறுத்து பணம் பறிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தி பணம் பறிப்பவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் ஹோட்டல் உரிமையாளர்கள் நிறைவேற்று அதிகாரிகளிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபரில் ஆரம்பமான கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களாக செயற்படும் ஹோட்டல்களின் உரிமையாளர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்

வர்ததக நடவடிக்கைகளிற்காக இந்த ஹோட்டல்கள் வெளியாட்களிற்கு பணம் செலுத்தக்கூடாது என தெரிவித்துள்ள அவர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படுபவர்களை நியாயமான முறையில் நடத்தவேண்டும், உணவுகளை பராமரிப்புகளை சிறந்த முறையில் வழங்கவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த கட்டணங்களில் முழுமையான வசதிகளை வழங்கவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தி பணம் பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றால் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்களையும் இராணுவதளபதி வழங்கியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply