கிளிநொச்சியில் வெள்ளத்தின் மத்தியிலும் சூரியனுக்கு பொங்கல்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலருக்கு உட்பட்ட பல கிராமங்கள்
கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள்
மற்றும் காணிகள் நீரில் மூழ்கி காணப்படுகின்ற நிலையில் பலர் தைப்பொங்கல்
அனுஷ்டிக்காது உள்ளனர்.

இந்நிலையில் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட
புலோப்பளை மேற்கு சிந்தாத்திரை மாதா தேவாலயத்தை சூழ வெள்ள நீர்
உட்புகுந்துள்ள நிலையிலும் நீரின் மேல் கற்கள் அடுக்கி தகரங்களை வைத்து
சூரியனுக்கு இளைஞர்கள் பொங்கல் பொங்கி படைத்து வழி பட்டனர்.

Be the first to comment

Leave a Reply