
புதியவீரியமிக்க கொரோனா வைரசினை அடையாளம் காணும் விடயத்தில் சுகாதார அமைச்சு பொறுப்புணர்வற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது என அரசாங்க மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய வீரியமிக்க வைரஸ் உலகின் பல நாடுகளிற்கும் பரவியுள்ளதன் காரணமாக
வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரும் மரபணுபகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பெரும் ஆபத்து உருவாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் பரவும் புதிய வைரசினால் பாதிக்கப்பட்ட முதலாவது நோயாளி நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
புதியவகை வைரசினை அடையாளம் காண்பதற்கான மரபணு சோதனைசாதனங்கள் இலங்கையில் இல்லை என்பதால் இந்த வைரஸ் இலங்கையில் முன்னரே நுழைந்திருக்கலாம் எனவும் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
Be the first to comment