மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 30 ஊழியர்களுக்கு கொவிட்-19

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 30 சுகாதார சேவையாளர்கள் கொவிட்-19 தொற்றுக்காளாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக்கல்லூரியின் 9 தாதி மாணவர்கள் உட்பட 12 பேர் அதில் உள்ளடங்குவதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தாதியர் பாடசாலை மாணவர்கள் மற்றும் வைத்தியசாலை சுகாதார ஊழியர்களுக்கு  நடத்தப்பட்ட பிசிஆர், அன்டிஜென் சோதனைகளில் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply