கொழும்பிலிருந்து கல்முனை சென்ற இ.போ.ச. பேருந்து சாரதிக்கு கொவிட்-19

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான(S.L.T.B.) பேருந்தின் சாரதிக்கு கடந்த 12ஆம் திகதி கொவிட்-19 தொற்று உறுதியானதையடுத்து கொழும்பு மத்திய பஸ் நிலையத்தின் 25 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இ.போ.சபை ஊழியர்களுக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிக்கை பெறுவதற்கு முன் டிப்போ கண்காணிப்பாளர் சாரதியை பணிக்கு அமர்த்தியதாகவும் தெரியவருகிறது.

எனினும் சாரதி, நடத்துனருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் வீடுகளுக்கு சுய தனிமைப்படுத்தலுக்காகச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தற்போதைய சூழ்நிலையில் வீடுகளுக்குச் செல்வது பாதுகாப்பற்றது என்றும் தமக்கு பொருத்தமான இடத்தை ஒதுக்கித் தருமாறு இ.போ.ச. ஊழியர்கள் கோரியதாகவும் தெரியவருகிறது.

Be the first to comment

Leave a Reply