நோயாளி ஒருவருக்கு கொவிட்-19 தொற்று; மன்னார் வைத்தியசாலை மருத்துவ விடுதி மூடப்பட்டது

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ விடுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன் அதில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகள் சுயதனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் வைத்தியசாலை மருத்துவ சேவையாளர் களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அச்ச நிலை அங்கு காணப்படுகிறது.

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளிகளைப் பார்வையிடல் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற காரணங்களுக்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply