இலங்கை உட்பட 11 நாட்டு வணிகப் பயணிகளுக்கு ஜப்பான் தற்காலிகத் தடை

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இலங்கை உட்பட 11 ஆசிய நாடுகளின் வணிகப் பயணிகள் ஜப்பானில் நுழைவதற்கு அந்நாடு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

ஜப்பானில் வதியாத வெளிநாட்டினருக்கு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரை இத்தடை அமுலில் இருக்கும் என ஜப்பானியப் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.

இதன்படி இலங்கை, வியட்நாம், சீனா,தென்கொரியா, தாய்வான், ஹொங்கொங், மியன்மார், தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தனது நாட்டுக்கு வருகை தருவதை ஜப்பான் நிறுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply