கொழும்பு வடக்கு, மத்தியை மீண்டும் தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்- பொலிஸ் பேச்சாளர்

பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை மீறுவதன் காரணமாக கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு மத்தியை மீண்டும் தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்துவரும் பொலிஸர் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகைளப் பின்பற்றவில்லை, தனிமைப்படுத்தல் விதிமுறைகைள மீறி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனனர் என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக புதிய தொற்றுக்கள் உருவாகக்கூடிய ஆபத்துகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான நிலை உருவானால் அந்தப் பகுதிகளை தனிமைப்படுத்த வேண்டிய நிலையேற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply