ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்துகொண்டவருக்கு கொரோனா

திகாமடுல்லையில் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதியை கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகபிரிவின் இயக்குநர் மொகான்சமரநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றார் மருத்துவர்கள் தொடர்ச்சியாக அவரை கண்காணித்து ஆலோசனை வழங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விமலவீரதிசநாயக்க கலந்துகொண்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரின் நெருங்கிய சகா கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார், எனினும் அமைச்சர் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளன.

Be the first to comment

Leave a Reply