மொனராகலைக்கு அமெரிக்க நன்கொடையில் மொபைல் சோதனை அலகு

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு உதவும் ஒரு முயற்சியாக அமெரிக்கா அண்மையில் மொனராகலை பிராந்திய சுகாதார சேவைகளுக்கு மொபைல் சோதனை அலகு ஒன்றை நன்கொடையாக வழங்கியது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம்(USAID) நிதியளிப்பில் வழங்கப்பட்ட இந்த மொபைல் அலகு மூலம் நாளொன்றுக்கு 100 பேருக்கு பிசிஆர் சோதனைகளை நிர்வகிக்க முடியும் என்பதுடன் இது எதிர்காலத்தில் டெங்கு மற்றும் பிற தொற்று நோய்களுக்கு சோதனை செய்யவும் பயன்படும்.

“கொவிட்-19 சோதனைகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிற சேவைகளை கிராமப்புற சமூகங்களுக்கு வழங்குவதன் மூலம் தொற்று நோயால் ஏற்படும் ஆழமான மனித மற்றும் பொருளாதார இழப்புகளில் சிலவற்றைத் தணிக்க அமெரிக்கா உதவுகிறது” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.டெப்லிட்ஸ் இது குறித்துக் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply