ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய நியமனங்கள்

ஐ.தே கட்சியின் புதிய உப தலைவராக ருவன் விஜயவர் தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான புறக்கோட்டையில் அமைந் துள்ள ஸ்ரீகொத்தவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன் போது, கட்சியில் தற்போது வெற்றிடமாகவுள்ள பொதுச்செயலாளர் பதவிக்கு பாலித்த ரங்கே பண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய கட்சியின் புதிய தவிசாளராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ருவன் விஜயவர்தன உப தலை வராகவும் , முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரிய வாசம்  பிரதித் தலைவராகவும், ஏ எஸ் எம் மிஷ்பாய் பொரு ளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினால் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply