அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் செயலாளராக கடமையாற்றும் சமிந்த குலரத்ன என்பவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்குள் இவருடன் நெருங்கிப் பழகிய நபர்களை கண்டறிய நேற்யை தினம் பாதுகாப்பு கமராக்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் செயலாளர், மேலதிக செயலாளர் மற்றும் உதவி செயலாளர் உட்பட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை இன்றைய தினம் மாலை நாடாளுமன்றத்தில் கடமையாற்றும் 300 ஊழியர்களுக்குPCR பரிசோதனை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் PCR பரிசோதனை நடத்த இணங்கியுள்ளதாகவும் நாளை மறுதினமும் மேலும் சில ஊழியர்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply