ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான புறக்கோட்டையில் அமைந் துள்ள ஸ்ரீகொத்தவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

கட்சியில் தற்போது வெற்றிடமாகவுள்ள பொதுச் செய லாளர் பதவி உள்ளிட்ட அதிகாரிகள் குழாமை நியமிப்பது தொடர்பில், இதன்போது விசேடமாக அவதானம் செலுத் தப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஷமல் செனரத் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் போது ஐக்கிய தேசியக் கட்சிக் குக் கிடைத்துள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப் பினர் பதவிக்கு, இதுவரை எவரும் பெயரிடப்பாத பின்ன ணியில், அது தொடர்பிலும் இன்றைய செயற்குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Be the first to comment

Leave a Reply