நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்- வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, வடமத்திய, தென், கிழக்கு மற்றும் ஊவா மா காணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடி யுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது.

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற் றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர் பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுமென எதிர் பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக் கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்பு களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Be the first to comment

Leave a Reply