கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று

பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு குறித்த தீர்மானம் செய்யப் பாராளுமன்றம் இன்று கூடும்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலை மையில் இன்று பிற்பகல் 02 மணிக்கு இந்த கூட்டம் நடை பெறவுள்ளதாகப் பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 03 பேருக்கு கொவிட்- 19 கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிலைமை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், இன்று மற்றும் அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளச் சுகாதாரத் துறை நடவடிக் கை எடுத்துள்ளதால், பாராளுமன்ற உறுப்பினர்களும் பரிசோதனையில் பங்கேற்கலாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply