வனப்பகுதியில் வீசப்பட்ட நிலையில் 20 கிலோ ஹெராயின்!

கொஸ்கொட வனப்பகுதியில் 20 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், மவுண்ட் லவ்னியா, கொஸ்கொட மற்றும் பேலியகொட ஆகிய இடங்களில் மூன்று பெரிய அளவிலான சோதனைகள் நேற்று நடத்தப்பட்டது.

இதன்போது ஒரு சந்தேக நபர் 50 கிராம் ஹெரோயினுடன் பெலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் மற்றொரு சந்தேக நபர் 20 கிராம் ஹெரோயினுடன் மவுண்ட் லவ்னியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Be the first to comment

Leave a Reply