197 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடு களில் சிக்கியுள்ள 197 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, மாலத்தீவிலிருந்து 10 பேர், கட்டாரிலிருந்து 114 பேர் மற்றும் ஐக்கிய அரபு எமி ரேட்ஸிலிருந்து 73 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந் ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற் பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனைத் தவிர மேலும் 65க்கும் மேற்பட்டோர் இன்றைய தினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

அதன்படி, இந்தியாவிலிருந்து 13 பேர், பங்களாதேஷி லிருந்து 12 பேர், சிங்கப்பூரிலிருந்து 11 பேர், துருக்கி யிலிருந்து 06 பேர், சீனாவிலிருந்த 06 பேர் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 14 பேர், மாலைத்தீவிலிருந்து 03 பேர் ஆகிய நாடுகளிலிருந்து இன்றைய தினம் வருகை தரவுள்ளனர்

Be the first to comment

Leave a Reply