நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 158 பேருக்கு கொரோனா

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 588 பேரில் 158 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 147 பேர், கண்டி மாவட்டத்தில் 43 பேர் , களுத்துறை மாவட்டத்தில் 41 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 33 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 32 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 12 பேர், காலி மாவட்டத்தில் 11 பேர் , கேகாலை மாவட்டத்தில் 11 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

திருகோணமலை மாவட்டத்தில் 10 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 09 பேர், இரத்தின புரி மாவட்டத்தில் 07 பேர், வவுனியா மாவட்டத்தில் 06 பேர், புத்தளம் மாவட்டத்தில் 06 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 05 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அனுராதபுர மாவட்டத்தில் 04 பேர் , மாத்தறை மாவட்டத் தில் 03பேர் மாத்தளை மாவட்டத்தில் 02 பேர் , மொனரா கலை மாவட்டத்தில் 02 பேர் , அம்பாந்தோட்டை மாவட்டத் தில் 02 பேர் மற்றும் பதுளை மாவட்டத்தில் ஒருவர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர் .

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 04 பேரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply