இராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரையும் தனிமைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு இராமேஸ்வரம் மீனவர்கள் 09 பேரையும் 15 நாட்கள் தனிமைப்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு, இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை புறப்பட்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 09 பேரும் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த ஒன்பது மீனவர்களும் காணொளிக் காட்சியூடாக ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 25ஆம் திகதி வரை 15 நாட்களுக்கு காரைநகர் கடற்படை முகாமில் இராமேஸ்வரம் மீனவர்களுக்குச் சொந்தமான படகிலேயே தனிமைப்படுத்தி தங்க வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply