வடக்கில் நேற்று பொழிந்த அடை மழையால் 88 குடும்பங்கள் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் தொடரும் அடை மழை காரணமாக இதுவரை 88குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் அறிவித்துள்ளன.

வடக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட அதிக மழை வீழ்ச்சியின் காரணமாக நேற்று மாலை வரைக்கும் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் 88 குடும்பங்களைச் சேர்ந்த 319 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்திலே 22 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேர் பாதிப்படைந்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 8 குடும்பங்க ளைச் சேர்ந்த 33 பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகி யுள்ளனர்.

இதேபோன்று வவுனியா மாவட்டம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் நெடுங்கேணி வெடிவைத்தகுளம் கிராமத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 167 பேர் என இதுவரை மொத்தமாக 88 குடும்பங்களைச் சேர்ந்த 319பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply