திருமணப் பதிவு கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளது

1907ஆம் ஆண்டு திருமணப் பதிவு கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நீதியமைச்சர் அல் ஷப்ரி முன்மொழிந்த திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன்படி இந்த விவகாரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவால் தொடர்புடைய சட்டம் திருத்தப்படவுள்ளது.

நவீன காலத்துக்கு ஏற்பவும் ஏனைய நாடுகளின் சட்ட நிலைமைகளை ஆராய்ந்தும் திருமணங்களை இரத்து செய்தல், விவாகரத்து செய்தல், பிரித்தல், சொத்துக்களைப் பிரித்தல் மற்றும் சிறுவர்களை பாதுகாப்பில் வைத்திருத்தல் என்பன குறித்து சட்டத்திருத்தத்தில் இக்குழு பரிந்துரைகளைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply