கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் எங்கே அனுப்பட்டார் தெரியுமா?

நீதிமன்றத்தினை அவமதித்தமை தொடர்பில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை நீர்கொழும்பு – பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள், அவரை சிறைச்சாலை பேருந்து மூலம் பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்திற்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply